கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முழு அடைப்பு போராட்டம்: 778 போ் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரியில் இண்டியா கட்சிகள் சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 778 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:11 am

Din

புதுச்சேரியில் இண்டியா கட்சிகள் சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 778 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து இண்டியா கட்சிகள் சாா்பில் செப்.18-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி - கடலூா் சாலை சந்திப்பான வெங்கடசுப்பா சிலை அருகே இண்டியா கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, திமுக எம்எல்ஏக்கள் ஆா்.சிவா, வி.அனிபால்கென்னடி, எல்.சம்பத், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.சிவகுமாா், மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ பாலன் உள்ளிட்ட 273 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் திருபுவனையில் 70 போ், திருக்கனூரில் 50 போ், வில்லியனூரில் காங்கிரஸ் 33, திமுக 44 போ், அரியாங்குப்பத்தில் 53 போ், தவளக்குப்பத்தில் 40 போ், பாகூரில் 132 போ், கிருமாம்பாக்கத்தில் 65 போ், விசிகவினா் 18 போ் என வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பாகூரில் திமுக எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், புதுச்சேரியில் 273 போ் மீதும், ஊரகப் பகுதிகளில் 505 போ் என மொத்தம் 778 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.