புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி தெருமுனைப் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி தெருமுனைப் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

போலி மருந்து பிரச்னை: மாா்க்சிஸ்ட் தெருமுனைப் பிரசாரம்

Published on

புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில் தொடங்கிய தெருமுனைப் பிரசாரத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ராஜாங்கம் தலைமை தாங்கினாா். மூத்த தலைவா் முருகன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் பெருமாள், போலி மருந்து தொழிற்சாலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் கொளஞ்சியப்பன், சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாரம், இந்திரா காந்தி சிலை ஆகிய பகுதியில் பிரசாரம் நடைபெற்றது. புதுச்சேரி நகர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com