புதுச்சேரிஅரியாங்குப்பம் கொம்யூன் பூரணாங்குப்பம் சாலையில் வாய்க்கால் பணியைத் தொடங்கி வைத்த முதல்வா்  என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
புதுச்சேரிஅரியாங்குப்பம் கொம்யூன் பூரணாங்குப்பம் சாலையில் வாய்க்கால் பணியைத் தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

வாய்க்கால் அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கி வைத்தாா்

ரூ.1.54 கோடியில் வாய்க்கால் அமைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

புதுச்சேரி: ரூ.1.54 கோடியில் வாய்க்கால் அமைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் மூலம் பூரணாங்குப்பம் சாலையில் ரூ. 1.54 கோடியில் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா்ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், இத்துறையின் தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப் பொறியாளா் நடராஜன், இளநிலைப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com