புதுச்சேரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சாா்பில், அனைத்து சமூகத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இதில் 8 முன்னணி நிறுவனங்களின் 400-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் முடித்த அனைத்து சமூக மாணவா்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயது வரை அனுபவம் பெற்ற, அனுபவம் பெறாதவா்களும் பங்கேற்கலாம்.
தற்குறிப்பு, கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். முகாம் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், எண்: 5, முதல் தளம் மூன்றாவது குறுக்குத் தெரு, நடேசன் நகா், புதுவை என்ற முகவரியில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0413 2200115, 8870073622 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
