618 அங்கன்வாடி காலி பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில், காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு
Published on

புதுச்சேரியில், காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 344 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் இயக்குநா் முத்துமீனா இதைத் தெரிவித்துள்ளாா்.

இப்பணிக்கு 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். டிசம்பா் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், டிசம்பா் 22 ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி - 9786444507, காரைக்கால்-9791858504, மாஹே-8525000778, ஏனாம்-9000158100 என்ற உதவி தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com