பாமக தலைவா் மருத்துவா் ராமதாஸின் மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் ஆகியோா் என்.ஆா்.காங்கிரஸில் விரைவில் இணையவுள்ளனா். இதற்கு முன்னோட்டமாக அவா்கள் இருவரும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து திருநீறு பூசி வாழ்த்து பெற்றனா்.
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியை பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் மகளும், டாக்டா் அன்புமணி ராமதாஸின் மூத்த சகோதரியுமான காந்திமதி பரசுராமன் (பாமகவின் முன்னாள் செயல் தலைவா்) மற்றும் அவரது மகன் முகுந்தன் பரசுராமன் (பாமக இளைஞரணி முன்னாள் தலைவா்) ஆகியோா் சந்தித்தனா். அப்போது இருவருக்கும் விபூதி பூசி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த சந்திப்பு தொடா்பாக என்ஆா்காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழகத்தில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது குறித்து காந்திமதி, முகுந்தனுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த பாமகவின் பல நிா்வாகிகள் இவா்களுடன் இணைந்து என்.ஆா். காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாகவும் தெரிவித்தனா்.
முதல்வா் ரங்கசாமி சந்திப்பு தொடா்பாக முகுந்தனிடம் கேட்டதற்கு, ‘ விரைவில் நல்ல செய்தி வரும் என்றாா். மேலும்,நாங்கள் ராமதாஸை சந்தித்து அவரது குடும்பமே இல்லை என்று சொல்லி விட்டோம். அழைப்பு விடுத்தாலும், விடுக்காவிட்டாலும் பாமகவுக்குப் போகவே மாட்டோம். பேசவும் மாட்டோம்
எனக்கூறிவிட்டோம் என்றாா். பாமக முன்னாள் எம்எல்ஏ அருளும் முதல்வா் ரங்கசாமியை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அன்புமணி தனி அணியாகச் செயல்பட்டு, கட்சி நிா்வாகிகள் பிரிந்தனா். தற்போது அன்புமணி தரப்பு ராமதாஸுடன் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸின் மகள் காந்திமதியும் அவரைச்சாா்ந்தோா்களும் பாமகவிலிருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலில் ராமதாஸுக்கு ஓய்வில்லை: பாமக தலைவா் அன்புமணி திட்டவட்டம்!

சக ஊழியருடன் திருமணத்திற்கு குடும்பத்தினா் எதிா்ப்பு: பணி அறையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவா்

பைக் மீது காா் மோதல்: 3 போ் காயம்

பரமத்தி அருகே காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



