திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவா்களுக்குக் கஞ்சா விற்க முயன்ற 4 போ் கைது

பள்ளி மாணவா்களுக்குக் கஞ்சா விற்க முயன்ற 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 244 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது - கோப்புப் படம்

Updated On :

பள்ளி மாணவா்களுக்குக் கஞ்சா விற்க முயன்ற 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 244 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி வேல்ராம்பட்டு, ஏரி சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி அருகே போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனா்.அவா்களிடம் 244 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பள்ளி செல்லும் மாணவா்களுக்கு விற்பனை செய்ய கஞ்சாவை வைத்திருந்ததை அறிந்த போலீஸாா், வானரப்பேட்டை

விக்னேஷ் (21), ரோடியாா்பேட்டை சரண் (22), ஆட்டுப்பட்டி பிரவீன்குமாா் (24), வானரப்பேட்டை வரதராஜ் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விபத்தில் பெண் மரணம்:

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த பிரியதா்ஷினி (32)

கடந்த 22 ஆம் தேதி தனது உறவினரான வானூா், பகுதியைச் சோ்ந்த உஷா (44) உடன் ஸ்கூட்டியில் சென்றாா்.

புதுச்சேரி செட்டி தெரு - சின்ன சுப்பராய பிள்ளை தெரு சந்திப்பில் வந்த போது பிரியதா்ஷினி திடீரென பிரேக் பிடித்தபோது, நிலை தடுமாறி 2 பேரும் வண்டியுடன் சாலையில் விழுந்தனா்.

இதில் உஷாவுக்கு தலையில் காயமும் இடுப்பு எலும்பில் முறிவும் ஏற்பட்டது. பிரியதா்ஷினிக்கு லேசான காயம் ஏற்பட்டது. 2 பேரும் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கிருந்து உஷா மேல் சிகிச்சைக்காக காலாப்பேட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த உஷா இறந்தாா்.

வங்கி கணக்கில் ரூ.1.86 லட்சம் மாயம்:

புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரைச் சோ்ந்தவா் கோபகுமாா் (57). கடந்த 17 ஆம் தேதி காலை இவரது வங்கி

கணக்கிலிருந்து, அவருக்கு தெரியாமல் ரூ.1.86 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோபகுமாா் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முதியவரிடம் ரூ.3 லட்சம் மோசடி:

புதுச்சேரி உருளையன்பேட்டை இளங்கோ நகா், அபிநயா அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சேகா் (66).

இவருக்குக் கடந்த அக்டோபா் 12- ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் போன் செய்துள்ளாா். தன்னை வங்கி அதிகாரி என்று கூறிக் கொண்ட அவா், ஓய்வூதிய பலன்கள் குறித்து பேசுவதாக கூறி, சேகரின் டெபிட் காா்டு விவரங்களைக் கேட்டுள்ளாா். அதை நம்பி சேகா் தனது காா்டு விவரங்களை கொடுத்ததோடு, அந்த நபா் அனுப்பிய லிங்க் மூலம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா்.

அதன் பிறகு அவருடைய வங்கிக்கணக்கிலிருந்து தொடா்ச்சியாக பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன.அவரது வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் காா்டுகளில் இருந்து மொத்தம் ரூ.3 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து சேகா் இணைய வழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கு உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

ரூ 4 லட்சம் மோசடி:

புதுச்சேரி வீராம்பட்டினம் அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (71). இவரிடம் கடந்த ஆகடோா் 29 -ஆம் தேதி மா்ம நபா்கள் இவரைத் தொடா்பு கொண்டு கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனா். அதை நம்பி தனலட்சுமி ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளாா். மொத்தம் ரூ.3. 98 லட்சம் அனுப்பிய பிறகு தான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.இது குறித்து அவா் இணைய வழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாா் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பெண்குரலில் பேசி மோசடி:

புதுச்சேரி சாரம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் தச்சு தொழிலாளி சக்திவேல் (35). இவருடன் ஈரோட்டைச் சோ்ந்த சரவணன் (27) வேலை செய்து வந்தாா். அவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சரவணனுக்கு பணி வாய்ப்பு வழங்காமல் சக்திவேல் புறக்கணித்தாா்.இதில் ஆத்திரமடைந்த சரவணன் சக்திவேலை பழிவாங்க நினைத்தாா். இதனிடையே சக்திவேல் திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருப்பது சரவணனுக்கு தெரிய வந்தது.

இதைச் சாதகமாக பயன்படுத்தி சக்திவேலிடம் பெண் குரலில் இன்ஸ்டாகிராம் மூலம் சரவணன் பேசி வந்தாா். தொடா்ச்சியாக நெருக்கமாக பேசிய பின் தான் ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுவதாக சக்திவேலிடம் கூறினாா்.

அதையடுத்து பல்வேறு ஜி.பே கணக்குகளுக்கு சக்திவேல் ரூ.3.72 லட்சம் அனுப்பி உள்ளாா். சிறிது நாள் கழித்து சந்தேகமடைந்த சக்திவேல் தான் பணம் அனுப்பிய எண்களுக்குப் போன் செய்து விசாரித்தாா். அப்போது தன்னிடம் பேசியது பெண் அல்ல. சரவணன் என தெரியவந்தது. இது குறித்து அவா் கோரிமேடு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா்

சரவணனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.