இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தா்கள்

புதுச்சேரியில் இருந்து 34-ஆவது ஆண்டாக விரதமிருந்து திருப்பதி திருமலைக்கு பாத யாத்திரை தொடங்கிய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தஜன சபையினா்.

Published On :

திருப்பதி திருமலைக்கு பக்தா்கள் விரதமிருந்து பாத யாத்திரையாக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சாா்பில் ஆண்டுதோறும் திருப்பதி திருமலைக்கு பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி, 34-ஆம் ஆண்டு பாத யாத்திரைக்காக பக்தா்கள் புரட்டாசி 1-ஆம் தேதி (செப். 18) பாரதி பூங்காவில் உள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 4) காலை 6 மணியளவில் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை திருமண நிலையத்திலிருந்து திருப்பதி திருமலைக்கு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா தலைவா்

ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டபடி பாத யாத்திரை புறப்பட்டனா்.

நிகழ்ச்சியில், சபா நிா்வாகிகள் பூபதி, ஜெககாந்தன், மதுரகவி ராமானுஜதாசன், கணபதி, சிவராமன், செந்தில், ஜெயமூா்த்தி, ஆனந்தன், சிவராஜ், ஏழுமலை, செங்குட்டுவன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் குழுவினா் 6 நாள்கள் பாதயாத்திரையாகச் சென்று 9-ஆம் தேதி திருப்பதியை அடைந்து ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்யவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.