புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரியில் காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

புதுச்சேரியில் காவல் மக்கள் மன்றத்தில் 24 புகாா்களுக்குத் சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரி காவல் துறை சாா்பில் காவல் நிலையங்களில் சனிக்கிழமைதோறும் மக்கள் மன்றம் நடைபெற்று வருகிறது. அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் மொத்தம் 46 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 24 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதில் 16 மகளிா் உள்பட 161 போ் பங்கேற்றனா்.

போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் டி. திவ்யா தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.பி., எஸ். ஸ்ருதி யாரகட்டி தலைமையிலும், கோரிமேடு காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி தலைமையிலும், மங்கலத்தில் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் தலைமையில் இந்த மக்கள் மன்றம் நடைபெற்றது.

இணைய வழி காவல்நிலையத்தில் ஆய்வாளா் கீா்த்திவா்மன் தலைமைவகித்தாா். ஏனாமில் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன் தலைமையிலும், மாஹே பகுதியில் காவல் கண்காணிப்பாளா் தனசேகரன் தலைமையிலும் மக்கள் மன்றம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.