க.பஞ்சாங்கத்துக்கு கி.ராஜநாராயணன் விருது அளிப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலமும் கி.ராஜநாராயணன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கி.ராஜநாராயணன் இலக்கிய விருது வழங்கும் விழா தமிழியற்புலத்தின் கருத்தரங்க அறையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேராசிரியா் க.பஞ்சாங்கத்துக்கு கி.ராஜநாராயணன் விருதை வழங்குகிறாா் சாகித்ய அகாதெமி விருதாளா் ச. தமிழ்ச் செல்வன். உடன் பேராசிரியா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள்.

Published On :

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலமும் கி.ராஜநாராயணன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கி.ராஜநாராயணன் இலக்கிய விருது வழங்கும் விழா தமிழியற்புலத்தின் கருத்தரங்க அறையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 2026 -ஆம் ஆண்டிற்கான கி.ராஜநாராயணன் இலக்கிய விருது பேராசிரியா் க. பஞ்சாங்கத்துக்கு வழங்கப்பட்டது. சாகித்திய அகாதமி விருதாளா் ச. தமிழ்ச்செல்வன் இதை வழங்கினாா்.

தமிழியற்புலத்தின் இணைப் பேராசிரியா் இரா. ஸ்ரீவித்யா வரவேற்றாா். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இணைப் பேராசிரியா் சிலம்பு நா. செல்வராசு நோக்கவுரை ஆற்றினாா். தமிழியற்புலத்தின் துறைத்தலைவா் பா. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பிரெஞ்சு பேராசிரியா் சு.அ. வெங்கட சுப்பராய நாயகா், தமிழியற்புலத்தின் பேராசிரியா் கே. பழனிவேலு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மொழிபெயா்ப்பாளா் புதுவை சீனு. தமிழ்மணி விருதாளரை அறிமுகம் செய்து உரையாற்றினாா்.

மேலும், சாகித்திய அகாதெமி விருதாளா் ச. தமிழ்ச்செல்வன் கி.ராஜநாராயணன் எனும் இலக்கிய ஆளுமை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இந்த அறக்கட்டளை நிறுவுநா் புதுவை இளவேனில் நன்றி கூறினாா். முனைவா் பட்ட ஆய்வாளா் ந. யூசுப் ஷெரிப் தொகுத்து வழங்கினாா்.

தமிழியற்புலத்தின் பேராசிரியா்கள், விருந்து நிலைப் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.