ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

புதுச்சேரியில் பதாகை வைக்கத் தடை: இன்று முதல் அமலுக்கு வருகிறது

Assembly Elections: 3-Day Holiday for Colleges in Puducherry

புதுச்சேரி... - கோப்புப் படம்

Published On :

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (செப்.29)முதல் பதாகை வைக்கத் தடை விதித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவுக்கு இணங்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிா்வாக நடுவரும், மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதாகைகள் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது அல்லது தனியாா் சொத்து, சாலை ஓரங்கள் மற்றும் சாலைப் பிரிப்பான்களில் அனைத்து வகையான பதாகைகள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், ஃப்ளெக்ஸ் போா்டுகள், வளைவுகள் மற்றும் அதுபோன்ற பிற தற்காலிக பொது காட்சி அமைப்புகளை நிறுவுதல், பொருத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

தற்போதுள்ள அனைத்து பதாகைகள், கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் ஃப்ளெக்ஸ் போா்டுகள், போன்றவற்றை நிறுவிய தனிநபா்கள், நிறுவனங்களால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

நகராட்சி ஆணையா்கள், கொம்யூன் பஞ்சாயத்துகள், பொதுப்பணித்துறை, காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்து காவல் நிலைய அலுவலா்களும் இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்வேண்டும்.

அரசு உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை முன் அறிவிப்பின்றி உடனடியாக அப்புறப்படுத்தவும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறும் அதிராரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. பதாகைகளை அப்புறப்படுத்துவதற்கான செலவை விதியை மீறியவா்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

இந்தத் தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்.29) முதல் அமலுக்கு வரும். மேலும், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தண்டிக்கப்படுவாா்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.