காவிரி விவகாரத்தில் அதிகாரம் இல்லாத அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி குற்றஞ்சாட்டினார்.
வன்னியர் சங்கத் தலைவரும் பாமக முன்னாள் எம்எல்ஏவுமான ஜெ.குரு உடல் நலம் பெற வேண்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோயில், வைகுண்டவாசப் பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பாமகவினர் சிறப்புப் பூஜைகளை நடத்தி வழிபட்டனர்.
இதில் பங்கேற்ற பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்தை பொறுத்தவரை, நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
காவிரி இறுதித் தீர்ப்பை வழங்கி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதுடன் அதிகாரம் இல்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
உலகில் பல நாடுகளுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்னைகள் சிறப்பாகத் தீர்க்கப்பட்டுள்ளன. எதிரிகளாக உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே கூட நதிநீர் விவகாரம் பிரச்னையின்றி தீர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், காவிரி பிரச்னையை தீர்க்காமல் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. தமிழக மக்களுக்கான காவிரி உரிமைப் போராட்டத்துக்காக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சி போராடினாலும் அதற்கு பாமக துணை நிற்கும். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான வழிகாட்டுதலுக்கு உள்படுத்த முயன்ற சம்பவத்தில், உண்மை நிலையை விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும் என்றார்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி, துணைத் தலைவர் சி.அன்புமணி, அமைப்புச் செயலர் பா.பழனிவேல், மாவட்டச் செயலர் இர.புகழேந்தி, புண்ணியக்கோடி, பெருமாள், தன்ராஜ், பழனிவேல், ராவணன், ராஜா, அன்னக்கிளி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இசைத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனிருத்தின் ரிவென்ஞ்ச் ராகம்!

நாட்டின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமா? தில்லியில் 9 பேர் கைது

இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்





