கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:09 am

DIN

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரோட்டத்தை தரிசித்தனர். 
கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீகவல்லி ஸமேத ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கடந்த 20 ஆம் தேதி காலை துவங்கியது. தினமும் காலையில் பள்ளக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இரவில் சுவாமி ஹம்ஸ வாகனம், ஸிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம் பரமபதநாதச் சேவை, கருடசேவை, திருப்பல்லக்கு, யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்குமேல் மேஷ லக்னத்தில் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. 9 மணிக்கு மேல் மந்தைவெளித் திடலை விட்டு கிளம்பியது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, சேலம்-சென்னை நெடுஞ்சாலை, கவரைத்தெரு வழியாக, மந்தைவெளித் திடலை மதியம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.