ஆயுதப்படை போலீஸாருக்கு பாராட்டு
சென்னையில் நடைபெற்ற காவல் திறனாய்வுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


சென்னையில் நடைபெற்ற காவல் திறனாய்வுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில், அகில இந்திய 61-ஆவது காவல் திறனாய்வுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டி தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதில், மூன்று யூனியன் பிரதேசங்கள், ஆறு மத்திய படையினர் மற்றும் 21 மாநிலங்களின் போலீஸார் என 1,400 பேர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் போலீஸார் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவிலிருந்து மோட்டார் வாகன சாகசப் போட்டிக்கு தலைமைக் காவலர்கள் பூபாலன், வேல்முருகன் மற்றும் போலீஸார் சம்பத், விஜய் பாலாஜி, அந்தோனி உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு சாகசங்களை நிகழ்த்தினர். இவர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி தமிழக சி.பி.சி.ஐ.டி. ஏடிஜிபி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சனிக்கிழமை ஆயுதப்படை போலீஸாருக்கு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, மோட்டார் வாகன பிரிவு எஸ்.ஐ. துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...