ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

நெல் மூட்டைகளை வாங்கி விவசாயிகளிடம் ரூ.2.74 கோடி மோசடி: வியாபாரி தலைமறைவு

கரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 29 ஆயிரம் நெல் மூட்டைகளை வாங்கி, ரூ.2.74 கோடி அளவுக்கு மோசடி செய்து தலைமறைவான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:25 am IST

கரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 29 ஆயிரம் நெல் மூட்டைகளை வாங்கி, ரூ.2.74 கோடி அளவுக்கு மோசடி செய்து தலைமறைவான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஊனத்தூரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. நெல் வியாபாரி. வேப்பநத்தத்தில் நெல், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட பொருள்களை மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவர் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெச்சலூரைச் சேர்ந்த ராஜா, வைரபெருமாள், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணி, ரவிச்சந்திரன், பிரகாஷ் மற்றும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சுமார் 29ஆயிரம் நெல் மூட்டைகளை வாங்கினாராம். ரூ.3.50 கோடி மதிப்புள்ள இந்த நெல் மூட்டைகளுக்கு ரூ.61 லட்சத்தை சின்னக்கண்ணு முதல்கட்டமாக விவசாயிகளிடம் கொடுத்தாராம்.
 மீதமுள்ள ரூ.2.89 கோடியில் ரூ.30 லட்சத்தை கடந்த மே 17-ஆம் தேதியும், பாக்கித் தொகையை ஜூன் மாதத்திலும் கொடுத்து விடுவதாக கூறினாராம். ஆனால், ரூ.15 லட்சம் மட்டுமே கொடுத்தாராம்.
 மேலும், விவசாயிகளிடம் பெற்ற நெல் மூட்டைகளை சின்னக்கண்ணு விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் வங்கியில், மனைவி கெüசல்யா பெயரிலும், கார் ஓட்டுநர் ராஜா என்பவரது பெயரில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த நெல் மூட்டைகள் கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலையில் உள்ள மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஞ்சியுள்ள பணத்தை குறித்த தேதியில் வழங்காத சின்னக்கண்ணு, தனது மனைவி கெüசல்யாவுடன் தலைமறைவாகி விட்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கரூர் மாவட்ட குற்றப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் புகார் மனுவை அளித்தனர். பின்னர், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ரா.அம்சவேணி, மற்றொரு காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார் மற்றும் போலீஸார் கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனக் கிடங்கில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அங்கு, 20 ஆயிரம் நெல் மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
 இந்த மோசடி புகாரில் தலைமறைவான சின்னக்கண்ணு, அவரது மனைவி கௌசல்யாவை போலீஸார் தேடிவருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.