விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், நிலைய அலுவலர்கள், ரயில் என்ஜின் ஓட்டுநர்கள், கார்டுகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் ரயில்வே உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உதவிக் கோட்ட பொறியாளர் வசிஸ்ட் கௌரங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அலுவலகக் கண்காணிப்பாளர் மணிமாறன், உதவி கண்காணிப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் தெற்கு ரயில்வே உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உதவிப் பொறியாளர் வேசிஸ்ட் கவுராங் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். உதவி பொறியாளர் ராஜேந்திரன், மணிமாறன், மோகன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள்
கலந்து கொண்டனர்.