நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளர்களின் 15-அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

டாஸ்மாக் பணியாளர்களின் 15-அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணபதி, மாவட்டத் தலைவர் தனசேகர், பொருளாளர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வன்சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநில பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
      டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பணி வரண்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி வழங்குதல் ஆகிய 15-அம்சக் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அப்போது, சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர். 
ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை தேவையில்லாமல் பணியிடமாற்றம் செய்தலை தவிர்த்து, பொதுமாறுதல் மூலம் பணியிடமாற்றம் செய்யவேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை படித்த டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.