இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நெல் பயிர்கள் பாதிப்பு: வயல்களில் ஆய்வு

ரிஷிவந்தியம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத, பருவம் தவறிய வெளிமாநில நெல் ரகங்களை பயிரிட்டதே கதிர் வராததற்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பயிர்களை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ரிஷிவந்தியம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத, பருவம் தவறிய வெளிமாநில நெல் ரகங்களை பயிரிட்டதே கதிர் வராததற்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பயிர்களை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த விதை ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
 சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் தரமற்ற நெல் விதையால் 15 ஏக்கர் அளவிலான நெல்பயிர்கள் கதிர்வராமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
 இதுகுறித்து கோவை விதைச்சான்று இயக்குநர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் உத்தரவின் பேரில், கோவை விதை ஆய்வு இணை இயக்குநர் பாரதி, துணை இயக்குநர் மல்லிகா, திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் வைத்தியநாதன், ஜெயராமச்சந்திரன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர், செவ்வாய்க்கிழமை ரிஷிவந்தியம் பெரியகொள்ளியூரில், கதிர்வராமல் பாதித்த வயல்களை கூட்டாய்வு செய்தனர்.
 ஆய்வுக்குப் பிறகு இணை இயக்குநர் பாரதி உள்ளிட்டோர் கூறியதாவது: இப்பகுதியில் வெளிமாநில (ஹைதராபாத்) தனியார் ரக நெல் விதைகளை வாங்கி 6 விவசாயிகள் 12 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். நீண்ட கால ரகமான இந்த தனியார் ரக நெல், உரிய பருவத்தில் சாகுபடி செய்யாததால், 140 நாள்கள் ஆகியும் கதிர்வராத நிலையில் உள்ளன. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 இது போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, விதைச்சான்று துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்து, உரிய பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டும்.
 வேளாண்மைத் துறை பரிந்துரை செய்யும் பயிர்களையே, உரிய பருவத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்படாத இது போன்ற விதைகளை பயிரிடும் போது மகசூல் குறைபாடு, உரிய பருவத்தில் கதிர் வராதத் தன்மை ஏற்படுகிறது. சான்றட்டை பொருத்திய தரமான விதைகளைப் பெற்ற விற்பனை நிலையங்களிலேயே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும்.
 சான்றட்டையில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் பெயர் மற்றும் பருவத்துக்கு ஏற்ற ரகம் குறித்த விவரங்களை உறுதி செய்து வாங்க வேண்டும்.
 தற்போது வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்துக்குத் தேவையான நெல் ரகங்களான, திருச்சி 3, மேம்பட்ட வெள்ளைப் பொன்னி, சம்பா மசு, ஏ.டி.டி 49, ஏ.டி.டி 39, கோ 48, கோ 49 உள்ளிட்ட சான்று பெற்ற ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விதை விற்பனையாளர்களும், விதை விவர அட்டையில் பருவத்துக்கு ஏற்ற ரகம் என்பதை உறுதி செய்து, முளைப்புத்திறன் விதைப் பகுப்பாய்வு அறிக்கை பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் விதை கொள்முதல் செய்தவுடன் விதை ஆய்வாளர்களுக்கு தகவல் தர வேண்டும்.
 விவரக்குறிப்பு வைத்த விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், தவறும் விதை விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆய்வின் போது, விதை ஆய்வாளர்கள் செüந்தராஜன், அர்வின்ராஜ், ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். முன்னதாக, அதிகாரிகளிடம் தரமற்ற வெளிமாநில விதைகள் விற்பனையை கண்டறிந்து தடைசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.