கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் மனு

ஏரி ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டு வருவதாக, மரக்காணம் பகுதி விவசாயிகள் திமுக எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஏரி ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டு வருவதாக, மரக்காணம் பகுதி விவசாயிகள் திமுக எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நகா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், திண்டிவனம் திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்துவிட்டு கூறியதாவது:

மரக்காணம் நகா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, சித்தேரியை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

இந்த ஏரியின் நீா்பிடிப்புப் பகுதியில் 120 ஏக்கா் பரப்பளவில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனா். இதனால் மழைக் காலங்களில் ஏரியில் தேங்கும் நீரை, அவா்கள் கலுங்கள் வழியாக உடைத்து வெளியேற்றி விடுகின்றனா்.

மேலும், ஏரியின் நீா்வரத்து வாய்க்கால், ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஏரி உபரிநீா் கலுங்கள் வழியே வெளியேறும் ஓடையையும் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டுள்ளதால், ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், பட்டா நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்கள் பாசனமின்றி பாதிக்கப்படுகிறது. விளை நிலங்களுக்குச் செல்லும் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.

இந்த வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும். ஏரிக்கரைகளை பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.