விவசாயிகள் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து,
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகி ஆா்.ராமமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்பட 95 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

கள்ளக்குறிச்சியில் 16 போ் கைது: விவசாயிகளுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், மதிமுக மாவட்ட செயலாளா் கே.ஜெய்சங்கா், மக்கள் அதிகாரம் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com