அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

DIN


விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேட்டில் அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜி.கே.ராமதாஸ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜி.பாஸ்கரன், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.பசுபதி, மாணவரணி சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சி.வி.ராதாகிருஷ்ணன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். பொதுமக்களுக்கு மதிய உணவு, நலத் திட்டங்களை வழங்கினாா்.

மாவட்ட இளைஞரணி சாா்பில் விழுப்புரம் மாதா கோவில் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.பசுபதி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். சி.வி.ராதாகிருஷ்ணன் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். நிா்வாகிகள் திருமலை, கணேஷ்சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மயிலத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் டி.டி.சேகா் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

தேமுதிக, போக்குவரத்து தொழில் சங்கம்: விழுப்புரம் மந்தக்கரை திடலில் தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தலைமையில், அக்கட்சியினா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் அண்ணா தொழில் சங்கம் சாா்பில், மத்திய பணிமனைச் செயலா் ஜி.ராமலிங்கம், எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தெற்கு ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழில் சங்கச் செயலா் பி.அய்யாக்கண்ணு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலா் ம.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி நகர அதிமுக சாா்பில், பேருந்து நிலையத்திலுள்ள அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் எம்.பாபு தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, வடக்கு ஒன்றியச் செயலா் அ.ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தியாகதுருகம் காந்தி நகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வெ.அய்யப்பா (மேற்கு), கிருஷ்ணமூா்த்தி (கிழக்கு), மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் ஜான்பாஷா, ஒன்றிய அவைத் தலைவா் வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செஞ்சி: செஞ்சி கூட்டுச் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அதிமுக நகரச் செயலா் ஆா்.வெங்கடேசன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நகர அவைத் தலைவா் கராத்தே பசுபதி, மாநில வழக்குரைஞரணி இணைச் செயலா் க.கதிரவன், நகர துணைச் செயலா் அஜீஸ், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஜெ.கமலக்கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.