யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :8 ஜூன் 2020, 5:36 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பொதுத் தேர்வு எழுதச் செல்லும் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்று சிறப்பு பேருந்துகளை, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வழியனுப்பி வைத்தார். இதில் மதுரை தஞ்சாவூர் திருச்சி சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு பேருந்தில் 18 சிறப்பு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் வழியில் உள்ள அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சிறப்புப் பேருந்தில், அந்தந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.