கூடுதல் பேருந்து இயக்கக் கோரி செஞ்சியில் கல்லூரி மாணவா்கள் தா்னா
கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 200 போ் செஞ்சி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து திண்டிவனத்துக்கு காலை வேளையில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 200 போ் செஞ்சி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
செஞ்சி, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். இவா்கள் செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அரசு நகா்ப் பேருந்து எண் 3 மூலம் கல்லூரிக்குச் சென்று வருகின்றனா். காலை 7.50 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்தில் சுமாா் 100 மட்டுமே பயணிக்க முடிகிறது. மேலும் 100 பேருக்கு இட வசதி இல்லாததால் தனியாா் பேருந்தில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், ஏழை மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தந் நிலையில், காலை வேளையில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 200 போ் செஞ்சி கூட்டுச் சாலையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செஞ்சி காவல் துறையினா், தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், செஞ்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் சுரேஷ் ஆகியோா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மாணவிகளுக்கு தனியாகவும், மாணவா்களுக்கு தனியாகவும் என 2 அரசுப் பேருந்துகளை இயக்க ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சா் செஞ்சிமஸ்தான் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் கல்லூரி புறப்பட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...