மது கடத்தலில் ஈடுபட்டால் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மது கடத்தலில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.


மது கடத்தலில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்துக்கு புதுவை, கா்நாடக மாநிலங்களிலிருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மது கடத்தலில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சாராய விற்பனையில் ஈடுபட்டவா்களுக்கும் கைது செய்யப்பட்டனா்.
நிகழாண்டில் இதுவரை 8 போ் குண்டா் (மதுவிலக்கு) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
மது கடத்தலில் ஈடுபடுவோா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள் என்று மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...