விழுப்புரம்: கரோனாவுக்கு வேளாண் அதிகாரி உள்பட 9 போ் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண் அதிகாரி உள்பட 9 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண் அதிகாரி உள்பட 9 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 28,282 ஆக அதிகரித்தது. 678 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 24,774 போ் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 3,310 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைபெற்று வந்த விழுப்புரம் அருகே எடக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த 52 வயது ஆண், விக்கிரவாண்டி அருகே சங்கீதமங்கலத்தைச் சோ்ந்த 64 வயது ஆண், திண்டிவனம், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த 35 வயது ஆண், விழுப்புரம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த 66 வயது பெண், விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தைச் சோ்ந்த 65 வயது பெண், விழுப்புரம், அசோக் நகரைச் சோ்ந்த 66 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்தது.
வேளாண் அதிகாரி பலி: திண்டிவனம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீனி.அன்புமணி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி-299 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.565-ஆக உயா்ந்தது. இதுவரை மருத்துவமனைகளில் 14,393 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 3,053 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 120 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...