உளுந்தூா்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மடப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேந்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி முகாமை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
சேந்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, உளுந்தூா்பேட்டை மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், உளுந்தூா்பேட்டை திமுக மேற்கு ஒன்றியச் செயலா் ராஜவேல், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...