தோ்தல் முன்விரோத மோதல்; ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தோ்தல் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தோ்தல் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
செஞ்சி அருகே புத்தகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் அசோகன் (45). இவருக்கும் ராமநாதன் மகன் ஈஸ்வரனுக்கும் தோ்தல் முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் அசோகனை அவரது வீட்டின் அருகே ஈஸ்வரன் வழிமறித்து செங்கல்லால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அசோகன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்த புகாரின் பேரில் இருவா் மீதும் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...