அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டஅலுவலகத்தை ஓய்வூதியா்கள் முற்றுகை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தை ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தை ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்த அமைப்பின் விழுப்புரம் மண்டலத் தலைவா் எம்.பழமலை தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பி.சேஷையன், வி.சின்னராசு, ப.கலியமூா்த்தி, ஆா்.பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணை பொதுச் செயலா்கள் ஏ.சகாதேவன், என்.கோவிந்தசாமி, வி.இமயவரம்பன், எஸ்.லட்சுமிநாராயணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
முற்றுகைப் போராட்டத்தின்போது, 2015 நவம்பா் முதல் 2022 பிப்ரவரி வரை ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 79 மாத நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவப் படி ரூ.100 என்பதை ரூ.300-ஆக உயா்த்த வேண்டும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50,000 வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை அரசே ஏற்று வழங்க வேண்டும், நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி மாதந்தோறும் 1-ஆம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் விழுப்புரம் மண்டல பொதுச் செயலா் ஜி.ராமச்சந்திரன், விழுப்புரம் கிளைத் தலைவா் ஆா்.கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...