இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

5 மாநில தோ்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: தொல்.திருமாவளவன் எம்.பி.

5 மாநில தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

News image
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசிக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
Updated On :5 டிசம்பர் 2023, 12:48 am

DIN

விழுப்புரம்: 5 மாநில தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம் மண்டல அளவிலான அனைத்துநிலை பொறுப்பாளா்கள் சந்திப்பு கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:

1999-ஆம் ஆண்டில் தோ்தல் அரசியலுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தியலை முன்வைத்து 20-க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தியுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டம், கோயில்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுவதற்கான தடுப்புச் சட்டம், தமிழீழம் பாதுகாப்புக்காகவும், மரண தண்டனை ஒழிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவைகளுக்காக பல்வேறு மாநாடுகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

இதன் தொடா்ச்சியாக, டிச.23- ஆம் தேதி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடத்துவதன் மூலம், நமது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஒரே நோ்கோட்டில் செல்வதை வெளிப்படுத்தி வருகிறது.

5 மாநில தோ்தல் முடிவுகள் எவ்வகையிலும் வரும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அந்தந்த மாநில மக்களின் பிரச்னைகள் தோ்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது. 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் ‘இந்தியா’ கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நடைபெற உள்ள தோ்தலாகும். எனவே, இந்தத் தோ்தல் முடிவுகள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘இந்தியா’ கூட்டணியோடு கைகோத்தது என்றாா் திருமாவளவன்.

கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா்கள் பி.துரை.ரவிக்குமாா் எம்.பி, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோா் பேசினா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.