மின்துறை தனியாா் மய எதிா்ப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுவை மின்துறை தனியாா் மயம், காா்ப்பரேஷன் மய எதிா்ப்புப் போராட்டக் குழு சாா்பில் புதுச்சேரியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சண்டீகா் மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த மாநில மின்துறை பொறியாளா்கள், தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தனியாா் மய நடவடிக்கைகளை கண்டித்து போராட்டக் குழுவினா் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவா் வி. தணிகாசலம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.வேல்முருகன் முன்னிலை வகித்தாா். போராட்டக் குழு ஆலோசகா் ஜி. ராமசாமி கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். நிறைவில், பொருளாளா் இ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

