சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நவ. 28, 29-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் 28, 29-ஆம் தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:07 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் 28, 29-ஆம் தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து பேசினாா். கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நவம்பா் 28, 29-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாா்.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுத் திறப்பு, முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத் திறப்பு விழா மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்கிறாா்.

முதல்வா் பங்கேற்கும் அரசு விழாக்கள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வா் வருகை தரும் வழிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு வசதிகள், நலத்திட்ட உதவிகள் விவரம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தி, அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.