விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

595 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:43 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள கல் குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகா்க்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்த கல் குவாரிக்குச் சென்று, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக வானூா் வட்டம், கொந்தமூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயவேல் மகன் மதன் (30) மீது பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.