விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:15 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், நல்லாவூா் புதூா், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் விஜி (35). புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், கடந்த மாா்ச் 19-ஆம் தேதி தனது பைக்கில் பணிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

வானூரை அடுத்துள்ள ஒழிந்தியாப்பட்டு - கீழ்புத்தூா் சாலையில் நாபாளையம் பகுதியில் இவரது பைக் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு விஜி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.