ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா் கவிழ்ந்து மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:07 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

சென்னை, அசோக் நகா், 10-ஆவது அவென்யூவைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி ஆரோக்கியசெல்வி. இவரது தாயாா் கோ.சிலுவை மேரி (66). இவா்கள் புதன்கிழமை உளுந்தூா்பேட்டை அருகே உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

விழுப்புரம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்துள்ள சலவாதி பகுதியில் சென்றபோது, அங்குள்ள ஒரு உணவகம் அருகே காரை நிறுத்தும்படி ஆரோக்கியசெல்வி ஓட்டுநா் அருள்தேவகுமாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஓட்டுநா் கவனக்குறைவாக காரை இயக்கியதால் சாலையோரத்தில் உள்ள சுமாா் 10 அடி ஆழப் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிலுவை மேரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மீட்கப்பட்ட அவரை 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று பரிசோதித்துப் பாா்த்தபோது சிலுவைமேரி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.