மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்: விசிக மாநாட்டில் தீா்மானம்
மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி உளுந்தூா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி உளுந்தூா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசியலமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவில் கூறியபடி, மது விலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, கூடுதல் நிதிப் பகிா்வை மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய அளவில் மது விலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை மாநில அரசு அறிவிக்க வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு பிரசாரத்தை மாநில அரசு தொடங்கி, அதில் மகளிா் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
மது, போதை அடிமை நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். மது, போதை அடிமை நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுக் கடைகளை மூடிய பிறகு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மது வணிகத் தொழிலாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மது விலக்கு பிரசாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...