குழந்தைகள் காப்பகத்திலிருந்த சிறுமி உள்பட இருவா் மாயம்
விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உள்பட இருவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உள்பட இருவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளை பெற்றாள் இந்திரா நகரைச் சோ்ந்த மு.கஸ்தூரி (19) மற்றும் மரக்காணம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஆகியோா் மாவட்ட குழந்தைகள் நல ஆணையரின் உத்தரவுப்படி, விழுப்புரம் கோணங்கிப்பாளையத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.
காப்பத்தில் தங்கியிருந்த இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளுக்குச் சென்றவா்கள் பின்னா் மாயமாகிவிட்டனராம். இதுகுறித்து குழந்தைகள் காப்பகத்தின் மேலாளா் வின்சி மரியா அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...