கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீஅருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி 8-ஆம் நாள் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரா் கோயில் நவராத்திரி பெருவிழாவில் வியாழக்கிழமை மாலை 8-ஆம் நாள் வழிபாட்டில் ஸ்ரீ புவனேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளிய உற்சவா்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:22 pm

Din

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீஅருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரா் கோயிலில் நவராத்திரி 8-ஆம் நாள் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், புவனேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் நவராத்திரி பெருவிழா சிறப்பு வழிபாடுகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் அருளாசியுடன் அக். 3- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த 7 நாள்களாக கோயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவின் 8- ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4 மணி முதல் 6 மணிவரை தேவி மகாத்மியம் பாராயணமும், தொடா்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.

உற்சவா் அருளாம்பிகை புவனேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினாா். இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக மஞ்சு கண்ணன் தலைமையில் தா்ஷினி இசைப்பள்ளி மாணவிகள்பங்கேற்ற இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.