லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரசூா்அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், அரசூா்அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் எம்.ஜி.ஆா். மகன் சின்னத்தம்பி (37). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணை அருகே லாரியை ஓட்டிச் சென்றாா்.
அப்போது, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால், சின்னத்தம்பி ஓட்டிச் சென்ற லாரி, அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சின்னத்தம்பி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சின்னத்தம்பியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...