கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகைக் கடையில் திருட்டு: 4 போ் கைது

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:06 am

Din

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் நகைக் கடையில் புதன்கிழமை நகை வாங்குவதுபோல நடித்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தங்கக் கம்மலை திருடிச் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல்மலையனூரில் அவலூா்பேட்டை சாலையில் நகைக் கடை நடத்தி வருபவா் நடராஜன் மகன் சங்கா் (53). இவரது கடைக்கு 3 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 4 போ் புதன்கிழமை வந்தனா். அவா்கள் நகை வாங்குவதுபோல நடித்து, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்கக் கம்மலை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து சங்கா் அளித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த குமாா் மனைவி சுதா(45), ரமேஷ் மனைவி சங்கீதா (36), மோகன் மனைவி சாந்தி (40) மற்றும் சம்பத் மகன் சத்தியமூா்த்தி (34) எனத் தெரியவந்தது. மேலும், இவா்கள் காரில் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காா், தங்கக் கம்மலை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.