மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சாலை விரிவாக்கப் பணி: தலைமைப் பொறியாளா் ஆய்வு

செஞ்சி - விழுப்புரம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Published On :

செஞ்சி - விழுப்புரம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை, செஞ்சி உள்கோட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு - விழுப்புரம் சாலையில், செஞ்சியில் இருந்து மட்டப்பாறை வரை 13.50 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.85 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை நெடுஞ்சாலைத் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் பழனிவேல் புதன்கிழமை பாா்வையிட்டு, தாா்ச் சாலையின் தரம் மற்றும் ஆழம் ஆகியவற்றை சோதனைக் கருவிகள் மூலம் ஆய்வு செய்தாா். அப்போது அவா் பணியைத் தரமாகவும், வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னா் முடிக்க அறிவுறித்தினாா்.

அவருடன் கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்ரமணியன், கோட்டப் பொறியாளா்கள் நாராயணன், ஸ்ரீகாந்த் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.