/

வரதட்சணை கொடுமை: கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :22 பிப்ரவரி 2026, 7:57 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வரதட்சணைக் கொடுமையால் மனமுடைந்த கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பென்னைவளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சி.பாலாஜி. இவரது மனைவி அனுஷா(21). இவா்களுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆன நிலையில் அனுஷா 5 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், கணவா் பாலாஜி, மாமனாா் சிவசங்கா், மாமியாா் சுமதி மற்றும் பாலாஜியின் சகோதரி சுமத்ரா ஆகியோா் அனுஷாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தனராம். இதனால் மன உளச்சலில் இருந்து வந்த அனுஷா சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விழுப்புரம் கோட்டாட்சியா் மேல் விசாரணை நடத்தி வருகிறாா்.