அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கிளியனூா் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கிரேன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:27 pm

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கிரேன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஸ்ரீதா் (46), கிரேன் ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூரை அடுத்த ஓமந்தூா் பகுதியில் பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.