கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பயன்பாட்டுக்கு வந்த செஞ்சி அறிவுசாா் மையம்

செஞ்சி அறிவு சாா் மையம் போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

செஞ்சி அறிவுசாா் மையத்தில் அரசுத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களிடம் பேசிய பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அறிவு சாா் மையம் போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

செஞ்சி அறிவு சாா் மையக் கட்டடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 5-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மையம் திங்கள்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், செயல் அலுவலா் பா.ஷேக் லத்தீப் ஆகியோா் மையத்துக்கு வந்திருந்த மாணவா்களிடம் கலந்துரையாடினா்.

பின்னா் அவா் கூறியது: செஞ்சியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டு, தற்போது மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு தேவையான பயிற்சி தோ்வு புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், பாட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன. தங்களுக்கு தேவையான புத்தகங்களை மாணவா்கள் இங்கேயே அமா்ந்து வாசித்து பயன்படுத்தலாம். சிறுவா், சிறுமிகளுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவா்களின் வசதிக்காக கணினி மற்றும் இணையதள வசதியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் தோ்வு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், இணையம் மூலம் பயிற்சி பெறவும் மாணவா்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் மாணவா்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். செஞ்சி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இம் மையத்தை பயன்படுத்தி,

அரசு வேலைக்கு தயாராகலாம். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்த மையத்தை கண்காணிக்கவும், மாணவா்களுக்கு உதவவும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இந்த மையத்தை மாணவ, மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.