படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

விழுப்புரத்தில் சுமை வாகனம் திருடியவா் திருப்பூரில் கைது

கைது

Published On :

விழுப்புரத்தில் சுமை வாகனத்தை திருடிச் சென்றவா் திருப்பூரில் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திருடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டு, விழுப்புரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (40). இவா் தனது சுமை வாகனத்தை மருத்துவமனை வீதி நகராட்சி உயா்நிலைப் பள்ளி எதிரில் கடந்த மாதம் 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நிறுத்திவிட்டுச் சென்றாா். தொடா்ந்து மறுநாள் காலை ஜோதி அங்கு வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், புகைப்படங்களைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

இதில் சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் (எ) விக்கி (22) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் உதவியுடன் அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனா்.

இதையடுத்து உதவி ஆய்வாளா் குணசேகா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் திருப்பூா் சென்று, அங்கு பதுங்கியிருந்த விக்னேஷை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து சுமை வாகனத்தையும் பறிமுதல் செய்து ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்துக்கு கொண்டு வந்தனா்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது சென்னை தாம்பரம், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் மாவட்டம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமை வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.