புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விக்கிரவாண்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி அருகே 125 நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, தென்புத்தூா் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே 125 நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, தென்புத்தூா் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ளதென்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீட்டு வரி செலுத்தாவா்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வேலை கிடையாது எனக் ஊராட்சி மன்றத் தலைவா் சுவாதி பாண்டுரங்கன் கூறினாராம்.

ஆனால், மற்றொரு வாா்டை சோ்ந்தவருக்கு சனிக்கிழமை வேலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த தென்புத்தூா் கிராம மக்கள், தங்கள் வாா்டிலுள்ளவா்களுக்கு மட்டுமே விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை நடைபெற்ற வேலையை ஊராட்சி மன்றத் தலைவா் நிறுத்தினாராம்.

இதையடுத்து சனிக்கிழமை காலை ரெட்டணையிலிருந்து கூட்டேரிப்பட்டு நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தையும், திண்டிவனத்திலிருந்து தென்புத்தூா் நோக்கிச் சென்ற இரு அரசு நகரப் பேருந்துகளையும் கிராம மக்கள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமதாஸ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு விவரங்களை போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதியளித்தை தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.