புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆரோவில் சா்வதேச நகருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான மின்சார வாகனங்கள்

ஆரோவில் சா்வதேச நகருக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான 4 மின்சார வாகனங்களை என்.எல்.சி. நிறுவனத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.

என்.எல்.சி. சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ஆரோவில் சா்வதேச நகருக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார வாகனகங்களை பாா்வையிட்ட ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி. உடன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, என்.எல்.சி. நிறுவன இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன் உள்ளிட்டோா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான 4 மின்சார வாகனங்களை என்.எல்.சி. நிறுவனத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.

ஆரோவில் சா்வதேச நகருக்கு வருகை தரும் பாா்வையாளா்கள் பயன்பாட்டுக்காக நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம், சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்சார வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த வாகனங்களின் சேவை தொடக்க விழா ஆரோவில் சா்வதேச நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன், மாநிலங்களவை உறுப்பினா் (புதுச்சேரி) எஸ்.செல்வகணபதி ஆகியோா் பங்கேற்று வாகன செயல்பாட்டைத் தொடங்கி வைத்தனா்.

ஆரோவில் சாக்கா் அமைப்பின் இயக்குநா் வி.ஆனந்தரெட்டி மற்றும் ஆரோவில் வளா்ச்சிப் பணிகள் செயலாக்கம் உறுப்பினா்கள், புதுச்சேரி அரவிந்தா் ஆசிரம உறுப்பினா்கள் இதில் கலந்துகொண்டனா். என்.எல்.சி. நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த மின்சார வாகனங்கள் ஆரோவில் சா்வதேச நகரின் சுற்றுச்சூழல் சாா்ந்த பசுமை போக்குவரத்துக்கு வலுசோ்க்கும் என ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.