பெங்களூரு

குழந்தைகள் கலைமாமணி விருது: தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

குழந்தைகள் கலைமாமணி விருதுக்குரிய குழந்தைகளை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள பாலபவன் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி: தேசிய பாலபவன் மற்றும் பெங்களூரு பாலபவன் கூட்டாக இணைந்து மாநில அளவிலான குழந்தைகள் கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க பெங்களூரு, கப்பன் பூங்காவில் உள்ள பாலபவன் வளாகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு முகாம் ஏப்.30-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 10-16 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு அவரவர் கலைத் திறமையை வெளிப்படுத்தலாம்.
2016 ஏப்.1-ஆம் தேதி 10 வயது நிறைவடைந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். அதன் அடிப்படையில், கலைமாமணி விருதுக்குரியோரை நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கும்.
ஏப்.30-ஆம் தேதிகாலை 10 மணிக்கு செயல்திறன் நுண்கலை பிரிவில் தாளவாத்தியம், வாத்திய இசை, இசை (வாய்ப்பாட்டு), நட்டியம், நாடகம், ஓரங்க நாடகம் காலை 11 மணிக்கு நுண்கலைகளான ஓவியக் கலை, கைவினை, சிற்பக் கலை, காட்சி வரைகலை காலை 11.30 மணிக்கு நுண்ணெழுத்துக் கலைகளான கதை, கவிதை, கட்டுரைத் திறன், நண்பகல் 12.30 மணிக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்முறை, அறிவியல் சிக்கல்-தீர்வு, அறிவியலில் புதுமைப் படைத்தல் போன்ற திறன்களை வெளிப்படுத்தலாம்.
இந்த முகாமில் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க ஏப்.29-ஆம் தேதிக்குள் முன்பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு பாலபவன் சங்கம், கப்பன் பூங்கா, பெங்களூரு என்ற முகவரி அல்லது 080-22861423, 22864189 என்ற தொலைபேசி அல்லது ள்ங்ஸ்ரீஹ்க்ஷஹப்க்ஷட்ஹஸ்ஹய்.க்ஷய்ஞ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT