பெங்களூரு

"மாணவர்கள் உலக மாந்தர்களாகத் திகழ வேண்டும்'

தினமணி

மாணவர்கள் உலக மாந்தர்களாகத் திகழ வேண்டும் என்று எம்.எஸ். ராமையா அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சங்பால் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழத்தின் பட்டப் படிப்புகளைத் தொடக்கி வைத்து (படம்) அவர் பேசியது:
தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றாக எம்.எஸ். ராமையா அறிவியல் பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், சொந்த நலனுக்காக மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்வி பயில வேண்டும்.
மொழி, மாநிலம், நாடு என்ற குறுகிய சிந்தனையில் மாணவர்கள் இருக்கக் கூடாது. நவீன தொழில்நுட்பங்களால் உலகமே ஒரு வளையத்திற்குள் சுருங்கியுள்ளது. உலகவே இந்த பூமிக்குள் அடங்கியுள்ளது. எனவே, இந்த பூமியை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும். பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.
பாதிப்பில்லாத பூமியால் உலகமும், உலகம் சிறந்திருந்தால் நமது நாடும், நமது நாடும் சிறந்திருந்தால் மாநிலமும் சிறந்திருக்கும். வரும் நாள்களில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. அதற்காக இளைஞர்களும், மாணவர்களும் பாடுபட வேண்டும். மாணவர்கள் உலக மாந்தர்களாகத் திகழ்ந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். சிறந்த கல்வியும், பரந்த மனப்பான்மையும் நம்மை வாழ்க்கையில் உயர வழிவகுக்கும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழத்தின் வேந்தர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT