பெங்களூரு

மலர்க் கண்காட்சியில் ரூ.2.14 கோடி வசூல்

தினமணி

பெங்களூரு லால் பாக்கில் 10 நாள்கள் நடைபெற்ற சுதந்திர தின மலர்க் கண்காட்சியில் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ. 2.14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
 லால் பாக் பூங்காவில் 206}ஆவது மலர்க் கண்காட்சி ஆக. 4}ஆம் தேதி முதல் 15}ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெற்ற இக் கண்காட்சியை 5.74 லட்சம் பேர் கண்டு களித்தனர். இதன்மூலம் கட்டணமாக ரூ. 2.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் தேசியக்கவி குவெம்புவின் இல்லத்தை நினைவுபடுத்தும் வகையில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த மாதிரி இல்லம் அனைவரையும் கவர்ந்தது.
 இதனை காண பொதுமக்கள் மட்டுமன்றி, எழுத்தாளர்கள், சிந்தனையாளர் உள்ளிட்ட பலரும் கண்காட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியின் கடைசி நாளான சுதந்திர தினத்தன்று மலர்க் கண்காட்சியைக் காண 1.66 லட்சம் பேர் வந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT