பெங்களூரு

"சுகாதாரத் துறையில் புதிய முதலீடுக்கு வாய்ப்பு'

தினமணி

சுகாதாரத் துறையில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆந்திர சுகாதாரத் துறை தொழில்நுட்ப மண்டல இயக்குநர் விவேக் செய்கல் தெரிவித்தார்.
 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மருத்துவ மின்னணு தேசிய கூட்டமைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் அமைப்பு சார்பில் இந்திய சுகாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
 இதில் அவர் பேசியது: அண்மைக் காலமாக இந்தியாவில் சர்வதேச தரத்தில் மருத்துவச் சிகிச்சை முறைகள் உயர்ந்துள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவில் சிகிச்சை பெற வெளிநாட்டினரின் வருகின்றனர்.
 இதன்மூலம் சுற்றுலாத் துறையின் வருவாயும் உயர்ந்துள்ளது. ஆசிய அளவில் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களின் விற்பனையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.
 இதனால் இந்தியாவில் பொருளாதாரமும், சுகாதாரமும் உயர்ந்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT